
காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், எம்.எல்.ஏக்கள் இல்லாததால் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி வெங்கடாஜலபதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.