
உலக அளவில் நன்னீர் தட்டுப்பாட்டைப் போக்க, துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளைக் கப்பல்கள் மூலம் இழுத்து வந்து நன்னீராக மாற்றும் திட்டத்தை விஞ்ஞானிகள் மீண்டும் முன்வைத்துள்ளனர்.
1977-ல் சவூதி இளவரசர் முகமது அல் பைசல் அலாஸ்காவிலிருந்து பனிப்பாறையை இழுத்து வந்து இந்த முயற்சியைச் செயல்படுத்திக் காட்டினார்.
தற்போது பருவநிலை மாற்றம் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க இத்திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.