
வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தையின் உடல்நலக் குறைபாட்டைப் போக்கப் போராடும் தொழிலதிபரின் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், மமிதா பைஜூ மற்றும் ராதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெற்றி பெற்ற இந்தப் படம், வரும் செப்டம்பர் 11-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.