
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தில், வேட்டியின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாகக் குறைத்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேட்டி-சேலை வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய டிசைனில் வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
இந்த மாற்றத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான 8 முழ வேட்டிகள் தேக்கமடைந்துள்ளதாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஆஸ்டின் குற்றம் சாட்டியுள்ளார்.