
தமிழகத்தில் சென்னை தொடங்கி தென் மாவட்டங்கள் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறு, குறு தொழில்களும் விவசாயமும் பெருமளவில் முடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தில் மின் தேவையைவிட பற்றாக்குறை அதிகரித்துள்ளதே இந்த மின்தடைக்கு முக்கியக் காரணம் என மின்சாரத் தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.