/nakkheeran/media/media_files/2026/10/15/sc-official-2026-10-15-12-04-14.jpg)
இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மதமாற்றத்திற்கு முன்பு கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் சிறப்புச் சலுகைகளைக் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதம் மாறிய பின்னர் புதிய மதச் சமூகத்தில் பொருந்தக்கூடிய சட்ட விதிகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டைப் பெறுவது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.