
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதில் தவெக அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏரி, குளங்கள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், பருவமழைக்கு முன்பே போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் தாகத்தைத் தீர்க்க ஆழ்துளை கிணறுகள் அமைப்பது மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு முதல்வர் விஜய்க்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.