
செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான பண்டிகை காலத்தை முன்னிட்டு, பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல், நகைக்கடைகள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
FMCG, ஜவுளித் துறை, பெயிண்ட்ஸ் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகிய துறைகளும் பண்டிகை கால விற்பனையால் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தத் துறைகளில் நீண்டகால முதலீடாக இல்லாமல், குறிப்பிட்ட புள்ளிகளை நிர்ணயித்து டிரேடிங் செய்வதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும் என்று நிபுணர் ரெஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.