
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு புவனேஷ்வர் குமார் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
36 வயதான புவனேஷ்வர் குமார், 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய போட்டிக்குப் பிறகு டி20 அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் காயமடைந்த வருண் சக்கரவர்த்தியும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளார்.