
சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த கொளத்தூர் தொகுதியில், 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் இன்று முதல் 7 நாட்களுக்கு ஆய்வு செய்யப்பட உள்ளன.
ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் வீதம் சரிபார்க்கப்படும் நிலையில், காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு தொகுதிகளிலும் இதேபோன்ற ஆய்வுப் பணிகள் இன்று தொடங்குகின்றன.