
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' திரைப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளைப் பெற்றாலும், இணையத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
திரைப்படத்தில் கையாண்டுள்ள பால் புதுமையினர் கதாபாத்திரங்கள் மற்றும் கருத்துகள் தான் பெரும்பாலும் இந்த எதிர்மறை விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
திரைப்பிரபலங்கள் மற்றும் பல தரப்பினரிடமிருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்தாலும், சில சமூக ஊடகப் பயனர்கள் இப்படத்திற்கு எதிராகக் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.