
2026 சீசனில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற முயல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹர்திக் பாண்டியாவை அணியில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மும்பை அணி இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.
அணியின் செயல் திறன் குறித்த ஆய்வு தற்போது நடைபெற்று வருவதாகவும், அது முடிந்த பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் மும்பை இந்தியன்ஸ் தெரிவித்துள்ளது.