
வங்கதேச முன்னாள் கேப்டன் ஷகிபுல் ஹசன், தனது பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளித்தால் கொலை வழக்குகளை எதிர்கொள்ள நாடு திரும்பத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டில் வசித்து வரும் ஷகிபுல், 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் தனது கனவை இன்னும் கைவிடவில்லை.
மாணவர் போராட்டங்களின் போது நடந்த ஒடுக்குமுறை தொடர்பான வழக்குகளில் தனக்குத் தொடர்பில்லை என்று கூறிய அவர், மீண்டும் வங்கதேச அணியில் இணைய விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.