
தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவிற்கு என்ன பிரச்சனை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை என வாதிடப்பட்டுள்ளது.
கூடுதல் கோரிக்கைகளை காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடவும், நீர் வரத்து குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.