
பெங்களூருவில் வணிக நிர்வாகம் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர், கல்லூரி விடுமுறையில் 3 மாதங்கள் இருசக்கர வாகனப் பயண சேவை மற்றும் உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தினமும் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை பணியாற்றிய அவர், செலவுகள் போக ஒரு நாளில் சுமார் ரூ.1,200 வரை வருமானம் ஈட்டியுள்ளார்.
இணையவழி வேலைத் துறையின் செயல்பாடுகள், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் மற்றும் உழைப்பின் மதிப்பை நேரடியாகப் புரிந்துகொள்ளவே இந்தப் பணியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.