
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'தலைவர் 173' (தற்காலிகப் பெயர் 'தர்மன்') திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்த நிலையில், சில காரணங்களால் அவர் இதிலிருந்து விலகியுள்ளார்.
சுந்தர்.சி இப்படத்தை இயக்கப் போவதில்லை என்ற தகவலை கமல்ஹாசனுக்கு தொலைபேசி மூலம் தான் தான் தெரிவித்ததாக நடிகை குஷ்பூ நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.