
திண்டுக்கல்லில் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி 15,000 பேரிடம் ரூ.30 கோடி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
FQL Exchange மற்றும் VG Investment ஆகிய போலி செயலிகள் மூலம் முதலீடு செய்தவர்களில் தற்போது வரை 7,000 பேர் புகார் அளித்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொள்ள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.