
நடிகர் விஜய்யின் குடும்ப விவகாரங்கள் குறித்து இணையத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு பதிவுகளைப் பகிர்ந்துள்ளார்.
முதல் பதிவில் 'இந்த வயதிலும் தேவையில்லாமல் டிராமா பண்ணுவது அசிங்கமானது' என திரிஷா குறிப்பிட்டது, நடிகை குட்டி பத்மினிக்கு பதிலடி என நெட்டிசன்கள் கருதுகின்றனர்.
குட்டி பத்மினி, விஜய் - திரிஷா காதல் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் நிலையில், திரிஷா தனது இரண்டாவது பதிவில் 'நாம் பிரார்த்தனை செய்த வாழ்க்கை கிடைத்தது பாக்கியம்' எனத் தெரிவித்துள்ளார்.