
சட்டசபை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பில் சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் 'ரீல்ஸ்' பதிவிடப்படுவதைத் தடுக்க, 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்ப அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 25-ஆம் தேதி இரவு 7:15 மணி வரை இடைவேளையின்றி 10 மணி நேரம் சபை கூட்டம் நடைபெற்றதால், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.
சபாநாயகர் சபைக்குறிப்பில் இருந்து நீக்கும் வார்த்தைகள் நேரடி ஒளிபரப்பில் இடம்பெறுவதைத் தவிர்க்க, இந்த புதிய கட்டுப்பாடுகள் நடப்பு வாரத்திலேயே செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.