
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் விஜய் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
இந்த புதிய அறிவிப்பின்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும், அரசு வழங்கும் ஊக்கத்தொகை இரண்டு ரூபாயும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இந்த கொள்முதல் விலை உயர்வால் அரசுக்கு மாதத்திற்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 360 கோடி ரூபாயும் கூடுதல் செலவினம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.