/nakkheeran/media/media_files/2026/10/12/secretcurrrent-2026-10-12-17-29-38.jpg)
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு மற்றும் வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற புதிய உறுப்பினர்கள் அமைச்சர்களை வாழ்த்துவதற்காக தலைமைச் செயலகத்தின் முதல் தளத்திற்குச் சென்றபோது அங்கு அனைத்து அறைகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
முதல் தளத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகளில் மின்சாரம் தடைபட்டதை அடுத்து ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் இயக்கப்பட்ட சம்பவம் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.