
கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில், அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது, இதில் அண்ட்ரஸ் கோஸ் 82 ரன்கள் குவித்தார்.
வெற்றி இலக்கான 188 ரன்களைத் துரத்திய அன்டிகுவா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.