/nakkheeran/media/media_files/2026/10/10/998-2026-10-10-10-56-59.jpg)
டெல்லியில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி சிஜேபி கட்சியினர் நடத்திய போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தலைநகரில் மெட்ரோ மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டதோடு, போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், போராடும் மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடும் நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ளார்.