Technology
இந்தியாவின் முதல் முழுமையான சோலார் கிராமமாக மாறியது சத்தீஸ்கரின் 'கைரா'

இந்தியாவின் முதல் முழுமையான சோலார் கிராமமாக மாறியது சத்தீஸ்கரின் 'கைரா'

Daily Thanthi2h
THE BRIEF
1

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ் நந்த்காவ் மாவட்டத்தில் உள்ள 'கைரா' கிராமம், 24 மணி நேரமும் சூரிய ஒளி மின்சாரம் பெறும் இந்தியாவின் முதல் முழுமையான சோலார் கிராமமாக உருவெடுத்துள்ளது.

2

889 மக்கள் தொகையும் 141 வீடுகளும் கொண்ட இந்த கிராமத்தில், ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் 2 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மொத்தம் 282 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

3

மத்திய-மாநில அரசுகளின் மானியம் மற்றும் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால், கிராம மக்களின் வீடுகளுக்கான மாதாந்திர மின்கட்டணம் பூஜ்ஜியமாக மாறியுள்ளது.