
பாதுகாப்புத் துறை, AI மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்குத் தேவையான முக்கிய கனிம வளங்களுக்காகப் பிரித்தானியா சீனாவை ஆபத்தான அளவில் சார்ந்துள்ளதாக நாடாளுமன்ற விசாரணை அறிக்கை எச்சரித்துள்ளது.
இராணுவ விமானங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை தொழில்நுட்பங்களுக்கு அவசியமான அரிய நிலக்கனிமங்கள் மற்றும் லித்தியம் விநியோகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது.
சீனா ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால் அது பொருளாதாரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறும் என்பதால், தனிப்பட்ட நிதி அமைப்பு மற்றும் மாற்று விநியோக நாடுகளுடன் இணைந்து செயல்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.