
லண்டனில் நடைபெறும் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் அனஹத் சிங் 11-3, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அனஹத் சிங் எகிப்தின் மரியம் மேட்வாலியை வீழ்த்தி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரமித் தாண்டன் 11-6, 11-7 என்ற செட் கணக்கில் கத்தாரின் அப்துல்லா அல் தமிமியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.