
புதிய சூழலில் தூங்கும்போது மூளை அதிக விழிப்புடன் இருப்பதால் தூக்கம் லேசாக இருக்கலாம் என்றும், இது கனவுகளை நினைவில் கொள்ள வழிவகுக்கும் என்றும் மருத்துவர் ரோஹித் கண்ணா கூறுகிறார்.
மல்லாந்து படுத்துத் தூங்குவது காற்றுப்பாதையைச் சுருக்கி குறட்டை அல்லது மூச்சுத்திணறல் (sleep apnea) ஏற்பட வாய்ப்பளிப்பதால், ஒருக்களித்துத் தூங்குவது சிறந்தது.
தொடர்ச்சியான பயமுறுத்தும் கனவுகள் அல்லது வாரக்கணக்கில் நீடிக்கும் தூக்கமின்மை இருந்தால், தூக்கவியல் நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.