
செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் கூகுள், மைக்ரோசாப்ட் வரிசையில் மெட்டா நிறுவனமும் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பணியாற்றும் மெட்டா ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நவம்பர் 5-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு பணிக்கும் 2.15 மடங்கு மாதச் சம்பளம் வழங்குவதுடன், 10 மாதங்களுக்கு 80 சதவீத சம்பளத்துடன் விடுமுறையும் வழங்கப்படவுள்ளது.