
இந்திய கிரிக்கெட் வீரர்கள் இயந்திரங்கள் அல்ல என்பதை பிசிசிஐ மற்றும் ஐசிசி நிர்வாகிகள் உணர வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ச்சியான சர்வதேச போட்டிகளால் உள்நாட்டு கிரிக்கெட் பாதிக்கப்படுவதாகவும், 2027 முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்க, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு முன்பு போதிய ஓய்வு மற்றும் பயிற்சிப் போட்டிகளை வழங்க பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதியளித்துள்ளார்.