
தேசியப் பாதுகாப்பு மற்றும் உளவு பார்க்கும் அச்சுறுத்தல் காரணமாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
உலக அளவில் மனித உருவிலான ரோபோ உற்பத்தியில் 85 சதவீத பங்கைக் கொண்டுள்ள சீன நிறுவனங்களான யூனிட்ரி மற்றும் ஏஜிபாட் ஆகியவற்றின் தயாரிப்புகளுக்கு இந்தத் தடை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் மாவோ நிங், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.