
ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை காசாவிலிருந்து ராணுவத்தைத் திரும்பப் பெற முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஜூலை 30-ஆம் தேதி காசாவில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், நெதன்யாகுவின் இந்த முரணான பேச்சு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் காசா விவகாரங்களில் இஸ்ரேலின் பிடிவாதமான போக்கு, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க மிட்-டேர்ம் தேர்தலில் டிரம்பின் இமேஜைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.