
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சோகோ மற்றும் ரிசாரால்டா மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, 1,577 குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன; 37 கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாயின.
ரிசாரால்டாவின் பெரேரா நகரில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அஞ்சப்படுகிறது.