
சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டதால் புராதன கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகக் கூறி, தமிழக அரசு வாதிட மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகள் தலைமையிலான நிர்வாகக் குழுவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசும் அறநிலையத் துறையும் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.