
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக போராடிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்காக, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து, 36 நாட்களாக நீடித்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்ட நிலையில், மாணவர்கள் மீதான வழக்குகளை எதிர்கொள்ள இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைக்க புதிய வலைத்தளம் தொடங்கப்பட உள்ளதாகவும், அரசு வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றும் கட்சி எச்சரித்துள்ளது.