நடிகை கிருத்தி சனோன் நடித்த நகை நிறுவனத்தின் விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த விளம்பரம் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.
விளம்பரத்தின் உள்ளடக்கத்தில் இருந்த குறைபாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.