
2027-ம் ஆண்டுக்கான பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர், ஜூன் 24 முதல் ஜூலை 25 வரை பிரேசிலில் உள்ள 8 நகரங்களில் நடைபெறுகிறது.
மொத்தம் 64 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் தொடக்க மற்றும் இறுதிப் போட்டிகள் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெறவுள்ளன.
பிரேசில் அணி தனது முதல் லீக் ஆட்டத்தை ஜூன் 24 அன்று மரக்கானா மைதானத்திலும், கடைசி லீக் ஆட்டத்தை ஜூலை 4 அன்று பிரேசிலியாவிலும் விளையாடுகிறது.