
கூகிளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் ஆண்டறிக்கையில், நிகர லாபம் கடந்த ஆண்டை விட 25% குறைந்து 26.2 பில்லியன் அமெரிக்க டாலராகச் சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், ஆல்ஃபாபெட் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 12% முதல் 13% வரை வீழ்ச்சியடைந்து, இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம் கோடிக்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளன.
என்விடியா நிறுவனத்துக்குப் பிறகு பங்குச்சந்தை வரலாற்றில் இதுவே இரண்டாவது மிகப்பெரிய ஒருநாள் மதிப்பு இழப்பாகப் பார்க்கப்படுவதுடன், தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.