
தேவைக்கு அதிகமாக புரதச்சத்து எடுத்துக்கொள்வது வயிறு வீக்கம், மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிக புரதத்துடன் போதிய தண்ணீர் குடிக்காதது நீரிழப்பு அபாயத்தை அதிகரிப்பதோடு, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு கூடுதல் சிக்கல்களை உருவாக்கும்.
புரதத்தின் தேவை வயது மற்றும் உடல் செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடும் என்பதால், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் கூடிய சமநிலையான உணவை உட்கொள்வது அவசியம்.