
சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் லஞ்சம் கேட்பதாகக் கூறி, ஜிஎஸ்டி எஸ்பி உள்ளிட்ட 5 அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த பூக்கடை துணை ஆணையர் தலைமையிலான போலீசார், சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகளைப் பத்திரமாக மீட்டு யானைகவுனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் நிஷாந்த் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்டீல் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் மீது யானைகவுனி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.