
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள காவிரி நீர், எந்தவிதத் தடையுமின்றி கடைகோடி விவசாயி வரை சென்றடைவதை உறுதி செய்யுமாறு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி அறுவடை வரை முழு நீரைப் பெற்றுத் தர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், இடுபொருள் மானியங்களை உடனடியாக வழங்கவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.