
தாய்லாந்தின் நொந்தபுரி மாகாணத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 14 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பள்ளியின் ஊழியர்கள், மாணவரின் தாத்தா, பாட்டி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த 14 பேரில் 7 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 10 முதல் 14 வரை பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.