
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சுந்தரபாண்டியன் முன்னிலையில் நடந்த விசாரணையில், பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பொன்முடியை செப்டம்பர் 2-ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வழக்கின் அடுத்த விசாரணை அதே தேதியில் நடைபெறவுள்ளது.