
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தீவிர உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சியைப் கைப்பற்றியதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவின.
ஆனால் இந்த வதந்திகளைப் பொய்யாக்கும் வகையில், தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற தேசிய ஆடை மற்றும் காலணி கண்காட்சியை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று பார்வையிட்டுள்ள புகைப்படங்களை வடகொரியாவின் கே.சி.என்.ஏ அரசு ஊதியம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நாடாக வடகொரியா இருப்பதால், இது போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பலமுறை வெளியாகியுள்ளன.