
கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.