
ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியான கவின் - நயன்தாரா நடித்த ‘ஹாய்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தை நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகியுள்ளது.