
நாகப்பட்டினத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுகன், பார்த்திபன், சதீஷ் ஆகிய 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலனை கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தவெக நாகை மாவட்டச் செயலாளர் நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.