
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது; அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 76 ரன்கள் சேர்த்தார்.
இலங்கை அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றதுடன், கேப்டன் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்தார்.