
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முறையே 10 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் இரு சகோதரிகளும், அவர்களுடன் தங்கி 8-ம் வகுப்பு படிக்கும் அத்தை மகளும் மாயமாகியுள்ளனர்.
கேரளாவில் கிணறு வெட்டும் வேலை செய்யும் பெற்றோர்கள் போனில் கண்டித்ததை அடுத்து, அத்தை மகளுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்வதாக வீட்டைவிட்டுச் சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை.
இது குறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, போலீஸார் சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் சிக்னல் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.