
ஆஸ்திரியாவில் நடைபெற்று வரும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் அட்ரியன் மன்னாரினோவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.