
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று 2-வது முறையாக ரோடு ஷோ மூலம் பரப்புரை மேற்கொள்கிறார்.
தாராபுரத்தில் இருந்து மூலனூர் வரை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ செல்ல திட்டமிடப்பட்டு உள்ளதுடன், இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார்.
முதல்-அமைச்சர் ரோடு ஷோ செல்லும் வழிநெடுகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தை ஐ.ஜி. ரம்யா பாரதி ஆய்வு மேற்கொண்டார்.